Published : 22,Oct 2022 09:53 AM

ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கின் கதை தெரியுமா?- தமிழிசை பேச்சுக்கு முரசொலியில் பதிலடி

Murasoli-has-criticized-Tamilisai-as-saying-This-may-even-be-a-slanderous-speech-that-has-come-out-of-Telangana-with-unnecessary-nose-head-and-tail

''தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து பட்டிடும் பாட்டால் வெளிவந்த ஆதங்க பேச்சாகக் கூட இது இருக்கலாம்'' என தமிழிசையை விமர்சித்துள்ளது 'முரசொலி' பத்திரிகை.

தமிழகத்தில் மூக்கையும் தலையையும், வாலையும் நுழைப்பேன் என்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலளிக்கும் விதமாக 'முரசொலி' பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையில், ''தெலுங்கானாவில் அவரால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் ஒருவேளை தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும் வாலையும் நுழைத்து பட்டிடும் பாட்டால் வெளிவந்த ஆதங்க பேச்சாகக் கூட இது இருக்கலாம். இது தமிழக ஆளுநருக்கு அம்மையார் மறைமுகமாக தந்த எச்சரிக்கையாகவே தெரிகிறது.

image

தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து தெலுங்கானா ஆளுநர் பேசிய இந்த பேச்சு தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கு இது போன்ற நிலை உங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை கொடுத்து பேசிய பேச்சாக இருந்தால் வரவேற்கிறோம். ஒருவேளை வேறு அர்த்தத்தில் பேசியதாக அவர் கூறுவார் ஆனால், அம்மையாருக்கு ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கின் கதை தெரிந்திருக்கும். அதனை நினைவு கூற வேண்டுகிறோம்'' என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ரமேஷ்

இதையும் படிக்க: ’தமிழ்நாட்டு அரசியலில் நான் மூக்கை நுழைக்கிறேனா?’ - ஆளுநர் தமிழிசையின் உக்கிரமான பேச்சு!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்