Published : 18,Oct 2022 07:40 PM
பாக். வீரர் பாபர் அசாமிற்கு சுனில் கவாஸ்கர் கொடுத்த சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் பிரிஸ்பேனில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வழங்கிய இரவு விருந்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார். இவ்விருந்தில் பாகிஸ்தான் அணியின் வீரர்களை சந்தித்த கவாஸ்கர், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கைகுலுக்கி தெரிவித்தார்.
Babar Azam meets Sunil Gavaskar
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022
#T20WorldCup | #WeHaveWeWillpic.twitter.com/aYaB8lu6TJ
“மைண்ட் செட் செய்துவிட்டால் ஷாட் செலக்ட் செய்து பந்துகளை விளாசுவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது” என்று பாபர் அசாமிற்கு அறிவுரையும் வழங்கினார். மேலும் பாபர் அசாமிற்கு தனது “சன்னி” தொப்பியை பரிசாகவும் வழங்கினார் கவாஸ்கர். பாபருக்கு சுனில் கவாஸ்கர் தொப்பியை வழங்குவதையும், அத்தொப்பியில் அவர் கையெழுத்திடுவதையும் வீடியோவாக பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
“எனது சன்னி தொப்பியை நான் வெகு சிலருக்கு பரிசளிக்கிறேன். நேற்று ஹைடனின் பண்ணை வீட்டில் நானும் இரவு உணவிற்கு அழைக்கப்பட்டேன். அங்கு பாகிஸ்தான் அணி வந்திருந்த நான் பாபருக்கு எனது தொப்பியை பரிசளித்தேன்.” என்று கவாஸ்கர் தெரிவித்தார்.