Published : 11,Oct 2022 10:30 PM

எது சமோசாவுக்கு பேரா? - இணையத்தில் வைரலாகும் பெங்களூரு ஸ்நாக்ஸ்!

Images-of-Samosas-With-The-Name-Of-Filling-Written-On-goes-viral-in-social-media

நாம் வாங்கும் ஆடைகள், செருப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவற்றில் அதன்மீது பிராண்ட் பெயர் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஏன் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு டப்பா மீது கூட பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் சாப்பிடும் உணவின் மீதே பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் குறிப்பாக சமோசா மீது? அப்படி ஒரு விநோத முயற்சியில் இறங்கியிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு உணவு நிறுவனம்.

ஷோபித் பக்லிவால் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆம் அது சமோசாக்களின் படம்தான். ஆனால் அந்த சமோசாவிற்குள் என்ன நிரப்பியிருக்கிறார்கள் என்ற பெயரை சமோசா மீதே பொறித்துள்ளனர். அந்த சமோசாக்களில் சுவாரஸ்யமே அதுதான்! அந்த பதிவில், ’’பெங்களூருவில் உண்மையான உணவு ’தொழில்நுட்ப’ கண்டுபிடிப்பு’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவுக்கு பல்வேறு பயனர்களும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த சமோசாக்களை தயாரிக்கும் நிறுவனமான சமோசா பார்ட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்தும் ஷோபித்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமோசாக்களை உடைக்காமல் உள்ளே என்ன நிரப்பட்டுள்ளது என்பதை எளிதாக எளிதாக அடையாளம் காணமுடியும். வாடிக்கையாளர்களின் முக்கிய பிரச்னையை இது நிரந்தரமாக தீர்க்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் டெக்னாலஜி குறித்தும், சமோசா குறித்தும் பதிவிட்டு அசத்திவருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்