Published : 10,Oct 2022 03:30 PM

பஸ் ஸ்டாப்பிலேயே பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் - வைரலாகும் பகீர் வீடியோ

Student-who-tied-thali-to-schoolgirl-at-bus-stop-order-for-inquiry

பள்ளி மாணவிக்கு பேருந்து நிறுத்துமிடத்தில் தாலி கட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் வைரல் ஆகி கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில்தான் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தை வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில், பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பள்ளி மாணவிக்கு ஒரு மாணவர் தாலி கட்டும் காட்சிகள் கொண்ட வீடியோ தான் அது. அந்த வீடியோ பார்த்த பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வீடியோ தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி சிதம்பரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும், மாணவர் பாலிடெக்னிக் மாணவர் என்பதும், இந்த நிகழ்வு கடந்த சனிகிழமை நடந்திருக்கலாம் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

image

இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருவதால் இது குறித்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வித் துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில் மாவட்ட காவல் துறையும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பள்ளி மாணவி என்பதால் நிச்சயம் 18 வயதிற்கு கீழ்தான் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதனால், சட்டப்படி இந்த திருமணம் செல்வதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. அத்துடன், தாலி கட்டிய மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்