Published : 26,Sep 2022 07:38 PM

’நான் ஆடிய பாடலை பயன்படுத்திவிட்டு, என்னை ஆட கூப்பிடவில்லை’-சுந்தர் சி மீது குஷ்பூ புகார்!

Sundar-C-s-Coffee-with-Kadhal-music-and-Trailer-launch-Function

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காஃபி வித் காதல் பட விழாவில் நடிகை குஷ்பூ, மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் பற்றி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘காஃபி வித் காதல்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகை குஷ்பூ பேசுகையில், "நான் தயாரிப்பாளராக நிற்க காரணம் என் பெட்டர்ஹாஃப் சுந்தர் சி. குடும்பமாக பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம் கொடுப்பதே அவ்னி நிறுவனத்தின் நோக்கம். அதை வெற்றிகரமாக செய்தும் வருகிறோம். அதற்கு காரணமும் சுந்தர் சி தான். அவரை நம்பி காசு போடலாம். திரும்ப வந்துடும். தயாரிப்பாளர் நிம்மதியாக தூங்கலாம்.

இந்தப் படத்துக்காக ஊட்டி சென்ற சுந்தர் சி, கடுமையாக ஷூட் செய்தார் என சொல்கிறார்கள். எந்த அளவிற்கு பிஸி என்றால் என்னைக் கூட மறந்துவிட்டார். எங்கள் திருமண நாளுக்கு கூட வரவில்லை. நான்தான் அங்கு சென்று கொண்டாடிவிட்டு வந்தேன். நான் நடித்த ரம்பம்பம் பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஆட என்னைக் கூப்பிடவே இல்லை.

image

இந்த தருணத்தில் நடிகர் பிரதாப் போத்தன் சாரின் இழப்பை உணர்கிறோம். அவர் அப்பா ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னது சுந்தர் தான். படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பார்க்கும் போது நீங்களும் உணர்வீர்கள். இந்தப் படத்தை அவரது ஆன்மா ஆசிர்வதிக்கும் என நம்புகிறேன்” எனப் பேசினார்.

மேலும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஏ.எஸ்.சண்முகம் பேசும்போது, “எங்களுக்கு பல மருத்துவமனைகள் உள்ளன. அதில் இந்தப் படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்குமான மருத்துவம் சார்ந்த தேவைகளை இலவசமாக பெறும்படி ஒரு அட்டையை வழங்கியிருக்கிறேன். மேலும் அடுத்த மாதம் எங்கள் கல்லூரியில் நடக்கவுள்ள பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் சுந்தர் சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்