Published : 16,Sep 2022 03:49 PM

ரயில் புறப்பட்டதும்.. ஓடி சென்று டெலிவரி செய்த டெலிவரி பாய் - குவியும் பாராட்டுகள்!

Dunzo-Agent-Runs-Behind-Train-To-Deliver-Package-To-Woman

இணையத்தில் அவ்வப்போது உணவு டெலிவரி ஏஜெண்டுகளின் வீடியோ வைரலாவதுண்டு. அந்த வகையில் இந்த இன்று , ஓடும் ரயிலின் கதவும் அருகே நிற்கும் பெண்ணை நோக்கி டன்ஸோ டெலிவரி ஏஜென்ட் ஓடும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

டெலிவரி பேக்கேஜை டெலிவரி செய்ய, ரயில் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ, அவ்வளவு வேகமாக அந்த டெலிவரி ஏஜெண்டும் ஓடி, டெலிவரி பேக்கேஜை வெற்றிகரமாக ஒப்படைக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை மும்பையைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், மேலும் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளன. மேலும் வேலையில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு குறித்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

image

வீடியோவை காண - https://youtu.be/GMeiyzV5HNw

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்