Published : 01,Sep 2022 03:32 PM

6 ஆண்டுகளாக ஊடல், கூடலாக இருந்த காதலன் உண்மையில் அண்ணனாம்.. பெண்ணின் ஷாக் பதிவு!

women-found-out-that-her-boy-friend-is-her-biological-brother

(கோப்பு புகைப்படம்)

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் அவர் காதலிக்கும் அனைத்தும் பெண்களும், வக்கீலாக இருக்கும் அவரது அப்பாவின் பிற மனைவிகளுக்கு பெண்களாகவே இருப்பார்கள்.

கடைசி நேரத்தில்தான்தான் காதலித்த எல்லா பெண்களுமே தன்னுடைய தங்கை என சந்தானத்திற்கு தெரிய வரும். அப்படியான சம்பவம்தான் நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்திருக்கிறது. ஆனால் அதில் நிகழ்ந்திருக்கும் ட்விஸ்ட்தான் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருந்திருக்கிறது.

இது தொடர்பாக ரெடிட் தளத்தில் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, 30 வயதான அந்த பெண் தனக்கும் தன்னுடைய 32 வயதான காதலனுக்கும் இடையேயான பரம்பரை பந்தம் குறித்து டி.என்.ஏ. பரிசோதனை எடுத்த போது வந்த முடிவுதான் அந்த பெண்ணை ரெடிட் தளத்தில் புலம்ப வைத்திருக்கிறது.

அதன்படி அந்த பெண்ணும் அவருடைய காதலரும் கடந்த ஆண்டுகளாக ரிலேசன்ஷிப்பில் இருந்து வந்திருக்கிறார்கள். வழக்கமான காதலர்களை போல இவர்களுடையேவும் ஊடல், கூடல் தொடங்கி தம்பதியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து சொந்தமாக வீடும் வாங்கியிருக்கிறார்கள்.

image

(கோப்பு புகைப்படம்)

அந்த பெண்ணின் கூற்றுப்படி, இருவருமே தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்களாம். இது மேல்நிலை பள்ளி படிப்பின் போதுதான் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் அவர்களை பெற்றோர் உயிரியல் ரீதியான பெற்றோரா இல்லையா என்பது குறித்தெல்லாம் கவலைப்படாமல் சாதாரணமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணும், ஆணும் சந்தித்த பிறகு இருவருக்கும் இடையே உடனடியாகவே காதல் மலர்ந்திருக்கிறது. அதன் பிறகு எந்த பிரச்னையும் இல்லாமல் தங்களது காதல் வாழ்க்கையை இருவரும் ஒன்றாக தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்திலும், இந்த காதல் ஜோடியின் உருவம் ஒரே மாதிரி இருப்பதாக கூறிய போதும் அதனை கண்டுகொள்ளாமலேயே இருந்திருக்கிறார்கள். இருவரது வாழ்க்கையும் நன்றாக போய்க்கொண்டிருந்த தருணத்தில் தங்களுடைய வம்சாவளி குறித்து தெரிந்துக் கொள்வதற்காக DNA பரிசோதனை எடுத்து பார்க்கலாம் என நினைத்து அதனை செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

அதன்படி டி.என்.ஏ. பரிசோதனையின் முடிவு ஒரு மாதத்திற்கு பிறகு வந்திருக்கிறது. அந்த முடிவில் காதலர்களாக வாழ்ந்து வந்த இருவரும் உயிரியல் ரீதியான உடன் பிறப்புகள் என தெரிய வந்திருக்கிறது. இதனை அறிந்த அந்த பெண் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பெண் ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “எங்களுடைய பரம்பரை குறித்து தெரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நாங்கள் இருவரும் உண்மையில் அண்ணன் தங்கை என்பதை அறிந்துக்கொண்டேன். இது பற்றி என்னுடைய காதலராக இருக்கக் கூடியவரிடம் இன்னும் நான் சொல்லவில்லை. பரிசோதனையின் முடிவில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் ஒருசில விஷயங்கள் இந்த முடிவுக்கு பிறகுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உருவத்தில் இருப்பதாக எவருமே கூறுவார்கள். இப்போது எங்கள் இருவரின் போட்டோவை பார்க்கும் போது எனக்கே அப்படிதான் தோன்றுகிறது. இந்த டெஸ்ட் முடிவு என்னை பயமுறுத்துகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நல்லவேளை எங்களுக்கு குழந்தைகள் என எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர்களிடம் உங்கள் பெற்றோர் இருவரும் உடன் பிறந்தவர்கள் என கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். இது அவர்களது வாழ்வின் ஆரோக்கியத்தை பாதித்திருக்கும். ஆனாலும் இந்த சோதனை முடிவு தவறானதாக இருக்கும் என நினைக்கிறேன். விரைவில் உண்மையான டெஸ்ட் செய்யப் போகிறேன். இருப்பினும் என்னால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. இப்போதும் அவரை என் காதலராகவே பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்த டி.என்.ஏ. டெஸ்ட் முடிவு பற்றி பின்னர் காதலரிடம் காட்டியதாகவும், அதைக் கண்டு அவர் அதிர்ந்துப்போனதோடு உண்மையான டெஸ்ட் எடுக்கும் வரை எந்த ஒரு பெரிய முடிவுக்கும் வந்துவிட வேண்டாம் என்பதில் தெளிவாக கூறியதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்