Published : 17,Sep 2017 05:23 PM

நெல்லையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்

Nellai-neet-ban-meeting

நெல்லை பாளையங்கோட்டை ஜவகர் திடலில் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது தமிழகத்திற்கு நீர் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், முறையான கல்வி மற்றும் பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், ஆகவே மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.