Published : 17,Sep 2017 03:41 PM

காஷ்மீரில் மன்மோகன் சிங் குழுவினர் ஆய்வு

Manmohan-Singh-leads-Congress-team-to-Kashmir

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் ஒரு குழுவாக காஷ்மீர் சென்றுள்ளனர். அக்குழு அங்குள்ள தலைவர்களை சந்தித்து மாநிலச் சூழல் குறித்தும் அரசியல் நிலைமை குறித்தும் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாநிலக்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் காங்கிரஸ் குழு சந்திக்க உள்ளது. அதேசமயம், பிரிவினைவாதத் தலைவர்களை காங்கிரஸ் குழுவினர் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிய வருகிறது.

முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் வெடித்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அது குறித்து ஆலோசிக்க 'கொள்கை மற்றும் திட்டக்குழு' அமைக்கப்பட்டது. மன்மோகன் சிங் தலைமையிலான அந்தக் குழுவில் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தற்போதைய சூழல் குறித்து ஆராய்ந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்