Published : 11,Aug 2022 07:59 AM
கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ - இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ட்விட்டரில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக கோவை காவல்துறை இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவை கெம்பட்டி காலனியில் இயங்கும் இந்து மக்கள் கட்சி அலுவலகத்திலிருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் சமூகவலைதள கணக்குகளை கையாண்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 7ஆம் தேதி வெளியிட்ட ஒரு வீடியோவில் கருணாநிதி பற்றி அவதூறாக பதிவிட்டிருந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி அளித்த அந்தப் புகாரின் பேரில், இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவுக்கு பணம் வருகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு