Published : 17,Sep 2017 05:28 AM

மனைவிக்கு ஆபரேஷன்: தவான் டச்சிங் டிவிட்

Shikhar-Dhawan-s-Message-For-Ailing-Wife-Gets-Twitter-Emotional

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், தனது மனைவியுடன் உள்ள புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் தவான், அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதல் 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் உள்ள புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ’என் மனைவியுடன் இங்கு இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என் மனைவியுடன் இருப்பது அவருக்கு இந்த நேரத்தில் வலிமையாக இருக்கும் என்றும் இன்னும் சிறிது நாட்களில் அறுவை சிகிச்சை நன்றாக நடக்கும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.         
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்