Published : 30,Jul 2022 09:21 AM

குழந்தைகளை பராமரிப்பதில் உஷாரா இருங்க – போக்சோ வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

Be-careful-in-taking-care-of-children-Shocking-information-revealed-in-POCSO-case

திருப்பூரில் 16வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் செய்த உறவினரையும், விசாரணையில் சிறுமிக்கு மணமானதை தெரிய வந்ததை தொடர்ந்து சிறுமியின் கணவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கணியாம்பூண்டியைச் சேர்ந்த ஜான்சன். என்பவர் தனது மனைவி மற்றும் 16 வயது மகளை விட்டுவிட்டு சில வருடங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

image

இதையடுத்து சிறுமி, பெற்றோரின் முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியின் வீட்டருகிலேயே வசித்து வந்த சிறுமியின் சித்தப்பா பிரகாஷ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் முகத்தில் காயம் இருப்பதைக் கண்ட சிறுமியின் தாய், சிறுமியிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது சிறுமிக்கு பிரகாஷ் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து திருப்பூர் கொங்குநகர் (வடக்கு) அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரினை பெற்ற போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே, பனியன் நிறுவனத்தில் பணி புரிந்த விஷ்ணுராம் என்பருடன் திருமணமானதும், தாயாரிடம் திருமணமானதை மறைத்து விஷ்ணுராமுடன் ரகசியமாக வாழந்து வந்ததும் தெரியவந்தது.

image

இதனைத் தொடர்ந்து மகளிர் போலீசார் விஷ்ணுராம், பிரகாஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்