Published : 28,Jul 2022 10:13 AM
பச்சிளம் குழந்தையை தரதரவென இழுத்துச் செல்லும் குரங்கு.. பதறவைக்கும் வீடியோ!

விலங்குகளின் சேட்டைகள் நிறைந்த வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் பல ஆச்சர்யப்படுத்தினாலும் சில செயல்கள் அச்சுறுத்தவும் வைக்கின்றன.
அவ்வகையில் குரங்கு ஒன்றின் அச்சுறுத்தும் வீடியோதான் ட்விட்டர் தளத்தில் பல கோடி வியூஸ்களை பெற்றிருக்கிறது.
அதன்படி, குடியிருப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, குட்டி குரங்கு ஒன்று பொம்மை பைக் ஒன்றில் வலம் வருவதை கண்டு அந்த குடியிருப்பு மக்கள் மகிழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில், நடைபாதையோரமாக பெண் ஒருவர் குழந்தைகளோடு பென்ச்சில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக பொம்மை பைக்கில் வந்த அந்த குரங்கு, சடாரென பைக்கை போட்டுவிட்டு குழந்தை ஒன்றை தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறது.
Wkwkw kenapa jadi tambah banyak yang liat video ini https://t.co/ZZfChb1OZX
— Max (@maxzanip) July 26, 2022
இதனைக் கண்ட குடியிருப்புவாசிகள் பரபரத்து போய், கத்திய போது குழந்தையை இழுத்தச் சென்ற குரங்கு ஒரு கட்டத்தில் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.
வெறும் 15 நொடிகளே ஓடக்கூடிய இந்த வீடியோ 42.5 மில்லியனுக்கும் மேலானோர் கண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானாலும், 2020ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள தஞ்சுங்சாரி கிராமத்தில் நடந்ததாக தெரிகிறது.
விலங்குகளுடன் அளவளாவி மகிழ்வது சிறப்பானதாக இருந்தாலும் அவை எல்லா சமயத்திலும் ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருக்கும் என எண்ணிடாமல், குழந்தைகள் இருக்கும் இடங்களில் விலங்குகள், செல்லப்பிராணிகளை முறையாக கையாள்வதே நல்லது என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.