Published : 26,Jul 2022 12:41 PM

`ராயல் என்ஃபீல்ட் ரக பைக்குளில் இதான் விலை கம்மி!’- ஹண்டர் 350 மாடலின் விலை என்ன தெரியுமா?

Royal-Enfield-Hunter-350-set-to-launch-on-August-7

ராயல் என்ஃபீல்ட்... தங்களை கெத்தாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பும் இளைஞர்கள், முதலில் கையிலெடுக்கும் விஷயம், வாகனம் தான். அதிலும் கெத்து தொடர்பான விஷயங்களில், என்ஃபீல்டு ரக புல்லட்டுகள்தாம் இளைஞர்களின் மெயின் ஃபோக்கஸாக இருக்கும். அதைத்தாண்டியும் இன்ஜின், மைலேஜ், சத்தம் என ராயல் என்ஃபீல்டுக்கென்று நிறைய ஃபேன்ஸ் இந்தியாவில் உண்டு. இப்படியானவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு ஓட்டும்போது, மனதுக்குள் எழும் கெத்து நினைப்புக்கு, வேறெதுவும் ஈடாவதில்லை. ஆனால் அதற்காக எல்லோரிடமும் என்ஃபீல்டு வகை பைக் இருக்கிறதா என்று பார்த்தால், இல்லைதான்.

காரணம், அதன் விலை! `அட இன்னும் கொஞ்சம் விலை குறைஞ்சா நல்லா இருக்குமே’ என்று நினைக்காத மிடில் க்ளாஸ் பையன்கள் இந்தியாவில் மிக மிக குறைவுதான். அவர்களுக்காகவே வந்துள்ளது ஒரு அறிவிப்பு! விரைவில் ராயல் என்ஃபீல்டிலேயே, மிகக்குறைவான விலை உள்ள பைக் ரகம், விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது பாஸ்! `ஹண்டர் 350’ என்ற அந்த பைக் ரகம், ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்த `ஹண்டர் 350’ ரக பைக் ஜே-சீரிஸ் ஆர்கிடெக்சர் அமைப்புடன் ரெட்ரோ லுக்கில், 349 சிசி - சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டு இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  

image

ராயல் என்ஃபீல்ட் பைக், முதல்முதலில் 1901-ம் ஆண்டு சந்தையில் அறிமுகமாகி இருந்தது. உலகின் பழமையான, பாரம்பரிய பைக் பிராண்டான ராயல் என்ஃபீல்டில் இந்தியாவில் மீட்டியோர் 350, க்ளாசிக் 350, புல்லட் 350 ஆகிய ரக பைக்குகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றுடன் தற்போது ஹண்டர் 350-ம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

image

`ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350’ ரக பைக் வேலைபாடுகள் நிறைந்த பெட்ரோல் டேங்க், அகலமான கைப்பிடி, வட்ட வடிவில் கண்ணாடிகள், ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் அலகுகள், ரிப்பட் வடிவிலான பின்பக்க ஒற்றை இருக்கை, வட்டமான ஃபெண்டர்கள் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிடிஜிட்டல் எனப்படும் பாதி டிஜிட்டல் வடிவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் வயரிங் அல்லது அலாய் மூலம் சக்கரங்கள் செய்யப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஃப்ரண்ட் பக்க டயரில் இருக்கும் டிஸ்க் பிரேக், விபத்துகளிலிருந்து காக்க உதவுமென சொல்லப்படுகிறது.

image

ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் விற்பனை தொடங்க உள்ளதால், தற்போதிருந்தே ஹண்டர் 350 பைக் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு வர தொடங்கி விட்டது. அங்கு எடுக்கப்பட்ட படங்களும் கூட இணையத்தில் வெளியாகியுள்ளன. அதைவைத்தே மேற்கூறிய பைக் கணிப்புகள் வெளிவருகின்றன.

image

இந்திய சந்தையில் தற்போதுள்ள Yamaha FZ25, Suzuki Gixxer மற்றும் Pulsar 250 ஆகிய பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு பிற பைக் ரகங்களான கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) ஆகியவற்றுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும் என சொல்லப்படுகிறது.

image

ராயல் என்ஃபீலிடிலேயே இதற்குத்தான் மிகக்குறைந்த விலை இருக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் விலை என்ன என்பதுகுறித்த ஆர்வம் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வருகிறது. முதற்கட்ட தகவலின்படி ரூ.1.3 லட்சத்துக்கு இந்த பைக் விற்பனையாகும் என சொல்லப்படுகிறது. இந்த விலை ex-showroom விலையாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. பின்னாள்களில் இது On-Road வரும்போது மாறவும் செய்யலாம். எதுவாக இருந்தாலும், ஆகஸ்ட் 7-ம் தேதியன்றுதான் இதன் முழு விவரம் தெரியவரும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்