Published : 23,Jul 2022 02:14 PM
workaholic கவனத்திற்கு: மணிக்கட்டு வலியால் அவதியா? இந்த பதிவு உங்களுக்கு உதவும்!

ஆஃபிஸ் வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் 8 முதல் 10 மணிநேரங்களுக்கு கம்ப்யூட்டர் முன் கீபோர்ட், மவுஸை இயக்கியபடியே இருப்பார்கள். ஆனால் அதனை தவறான முறையிலோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதால் நிரந்தரமான காயமோ அல்லது பாதிப்புகளோ ஏற்படும்.
கம்ப்யூட்டர் கீபோர்டை ஒழுங்காக பயன்படுத்தாமல் போனால் முதுகு வலி, கழுத்துவலி, மணிக்கட்டு, விரல்களில் விறைத்துப்போவது உள்ளிட்ட உபாதைகளே வரும். இந்த பாதிப்புகளுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்தால் மூட்டுவலி, உணர்வின்மை, தசைநாண் அழற்சியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாதிப்பு ஏற்படுவதால் இதனை இளைஞர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் கீபோர்டில் டைப் செய்யும் போது மணிக்கட்டு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகிறது.
ஆகையால் மணிக்கட்டு மற்றும் விரல்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை காணலாம்:
1) நிமிர்ந்து உட்காரவும்:
உங்கள் ஷிஃப்ட் நேரத்தில் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதை முதலில் உணருங்கள். உங்கள் டெஸ்க்கில் அமரும் போது அடிக்கடி குனிவது, வளைவது பிரச்னையாக இருக்கலாம். எனவே தலை உடல் பகுதியை செங்குத்தாக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் முதுகை நாற்காலியோடு ஒட்டியபடி வைக்க வேண்டும்.
2) கம்ப்யூட்டரிலிருந்து தூரத்தை பராமரிக்கவும்:
20 அங்குல தொலைவில் உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்க்ரீன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். eye லெவலில் இருக்கும் அளவுக்கு கணினியை வைத்திருங்கள். இதன் மூலம் நீங்கள் உட்காரும் முறையில் பிரச்னை ஏற்படாது.
3) நாற்காலியின் உயரத்தை சரி செய்யவும்:
4)ergonomic கீபோர்டை பயன்படுத்தலாம்:
ergonomic வகையிலான கீபோர்டை பயன்படுத்துவதால் பரவலாக இயங்கவைத்து விரல்கள் மற்றும் மணிக்கட்டை சரியாக சீரமைக்க உதவும்.
இவை நான்கும் முக்கியமான குறிப்புகளாக இருந்தாலும், ஒவ்வொரு 30 அல்லது 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பிரேக் எடுத்து சற்று உடலை அசைப்பது மிகவும் முக்கியம்.
குறிப்பாக தொடர்ச்சியாக டைப் செய்பவர்களின் மணிக்கட்டுகளுக்கும், விரல்களுக்கும் அந்த பிரேக் தேவையானதாக இருக்கிறது. அந்த சமயத்தில் ஃபோனில் பேசி முடிக்கப்பட வேண்டிய வேலைகளை செய்வது, மேலதிகாரியிடம் பேசிவிட்டு வருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இதுபோக உங்கள் கால்களை அசைப்பது, உடலை முறுக்குவது, கழுத்து மற்றும் தோள்பட்டைகளை திருப்பும் பயிற்சிகளை செய்து, உங்கள் உட்கார்ந்த பொசிஷனை அடிக்கடி மாற்றலம்.
ALSO READ:
கைகளை கழுவுவதும் நோயா? - OCDம் அதன் அறிகுறிகளும்! What is OCD?
மேலும், அடிக்கடி சொடக்கு எடுக்கவும் வேண்டாம். ஏனெனில் இது விரல்களுக்கு காயத்தை ஏற்படலாம். விரல் மற்றும் மணிக்கட்டு மூட்டுகளில் வலி இருந்தாலோ அல்லது ஏதேனும் வீக்கத்தைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்.