Published : 17,Jul 2022 02:33 PM

’திரைக்கு வரும் முன்பே HD தரத்தில்’ - அருண் விஜய்யின் மிரட்டலான தமிழ் ராக்கர்ஸ் ட்ரெய்லர்!

tamil-rockers-trailer-released

‘SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது, இத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 19 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராக உருவாகியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் தொடர். பைரஸியுடனான திரைத்துறையின் போரை இந்த தொடர் காட்சிப்படுத்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியதாக அமைந்திருக்கிறது.

அருண் விஜய் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், நடிகர் அழகம் பெருமாள், நடிகை வினோதினி வைத்தியநாதன் மற்றும் குணச்சித்திர எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

image

இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், "பைரஸி திருட்டானது பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. இந்த தொடர் இந்த போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது. ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது. இப்பாத்திரம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தொடரின் மையம் தனித்தன்மை வாய்ந்தது, தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பெரும்பான்மையான மக்களிடம் இத்தொடரை கொண்டு செல்ல SonyLIV மிகப்பெரும் பாலமாக இருக்கும். ரசிகர்களின் கருத்துக்களை அறிய ஆவலோடு உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் தொடரின் ட்ரெய்லரை காண: 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்