Published : 13,Jul 2022 01:14 PM
ஒற்றையாளுக்காக மொட்டையடித்துக் கொண்ட ஒட்டுமொத்த மாணவர்கள்: என்ன காரணம் தெரியுமா?

விஜய்யின் நண்பன் படத்தில் ஜீவா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தபோது அவர் குணமாகி வருவதற்காக விஜய்யும், ஸ்ரீகாந்தும் என்னனமோ பேசி அவருக்கு நினைவை கொண்டு வர முயற்சிப்பார்கள்.
அந்தக் காட்சியை பார்க்கும் எவருக்குமே உணர்ச்சி பொங்கி வழியும். அந்த மாதிரியான நிகழ்வு பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
இன்ஸ்டாகிராமில், Good news movement என்ற பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ உணர்ச்சிக்களிப்பில் ஆழ்த்தியிருந்தது, அதனை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருப்பதை வைத்தே அறியலாம்.
அந்த வீடியோவில், மாணவர்களாக இருக்கக் கூடிய நண்பர்கள் குழு ஒன்று ஒற்றை மாணவனுக்காக தத்தம் முடியை மழித்து மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். எதற்காகவென்றால், அவர்களது வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை தொடங்கியிருக்கிறானாம்.
View this post on Instagram
அந்த மாணவனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அவனோடு அனைவரும் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை ஒற்றுமையாக வெளிப்படுத்தும் வகையிலும் பிற மாணவர்கள் அனைவரும் மொட்டையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதை பகிர்ந்த அந்த இன்ஸ்டா பக்கத்தில், யாருமே தனியாக போராடவில்லை என கேப்ஷனாகவும் இட்டிருக்கிறது. இதனைக் கண்ட பலரும் இதயப்பூர்வமான செயல் எனவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த மாணவன் விரைவில் நலம் பெறவும் தங்களது வாழ்த்துகளையும், வேண்டுதல்களை தெரிவித்திருக்கிறார்கள்.