Published : 03,Jul 2022 04:10 PM
மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் - 19 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி நகரில் இருந்து க்யூட்டா நகரை நோக்கி பஸ் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 33 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், டனிசார் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கிருந்த சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் இருந்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.