Published : 14,Sep 2017 11:20 AM
ஆஸி-க்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியா வெல்லும்: எம்.எஸ்.கே. பிரசாத் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கோலி தலைமையில் இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இலங்கையைப் போன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பிரசாத் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.