Published : 23,Jun 2022 09:48 AM

Viral Video : புலியை முறத்தால் அடித்து விரட்டியதுபோல முதலையை விரட்டிய முதியவர்!

australian-man-scares-away-crocodile-by-hitting-with-frying-pan

தன்னை தாக்க வந்த முதலையை முதியவர் ஒருவர் பாத்திரத்தை கொண்டு அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம் ஊர்களில் பெண்கள் புலியை முறத்தால் அடித்தே விரட்டினார்கள் என்பது போல, ஆஸ்திரேலியாவில் முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டியிருக்கிறார் முதியவர் ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள டார்வின் பகுதியில் கேளிக்கை விடுதி நடத்திவருகிறார் Kai Hansen என்ற முதியவர். தன்னை அச்சுறுத்த வந்த முதலையை வெறும் வாணலியால் (frying pan) விரட்டியடித்திருக்கிறார்.

ALSO READ: 

காதல் கணவனைவிட்டு காதலனுடன் தஞ்சமடைந்த காதல் மனைவி.. ஓமலூரின் காத்துவாக்குல ரெண்டு காதல்!

முதலை அதன் வாயை திறந்தபடி தாக்க வந்த போது, பப் உரிமையாளரான ஹேன்சன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாணலியால் அதன் தலையில் அடிப்பதை வீடியோவில் காணலாம். அதனையடுத்து முதலை காட்டு பகுதிக்குள் கடகடவென ஊர்ந்து சென்றிருக்கிறது.

Airborne Solutions Helicopter Tours என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் ஹென்சன் முதலையை விரட்டிய வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். இதனைக் கண்ட இணையவாசிகள் அதிகமானோர் அந்த வீடியோவை ஷேர் செய்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ALSO READ: 

இதுதான் பாம்புகளுக்கான இந்தியாவின் கிராமம்.. எங்கு இருக்கிறது தெரியுமா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்