Published : 29,May 2022 01:14 PM

கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?

It-has-been-reported-that-Prime-Minister-Narendra-Modi-and-Home-Minister-Amit-Shah-are-expected-to-watch-the-final-of-the-15th-IPL-cricket-series

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, லீக் சுற்றில் 14 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று முதலிடம் பிடித்திருந்தது. அந்த அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாண்டியா பக்கபலமாக இருக்கிறார். மேட்ச் வின்னராக அதிரடி வீரர் டேவிட் மில்லர், ஜொலிக்கிறார். பேட்டிங்கில் விருதிமான் சாஹா, ஷுப்மான் கில், ராகுல் திவாட்டியா, மேத்யூ வேட் ஆகியோரும், பந்துவீச்சில் ரஷீத் கான், அல்சாரி ஜோசப், முகம்மது ஷமி, யாஷ் தயாள் ஆகியோரும் கை கொடுக்கின்றனர்.

image

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரின் பங்கு அளப்பரியது. அவர் நடப்புத் தொடரில் 4 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 824 குவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால், ஹெட்மயர், படிக்கல் ஆகியோரும் பேட்டிங்கில் ஆறுதல் அளிக்கின்றனர். 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனான வலம் வருகிறார். ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அசத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

நடப்புத் தொடரின் லீக் மற்றும் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் குஜராத் அணி உள்ளது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாகி வருகின்றனர்
ராஜஸ்தான் அணியினர்.

மாரடைப்பால் அண்மையில் மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் வார்ன், வானில் இருந்து தங்களை பெருமையுடன் பார்ப்பதாக கடந்தபோட்டியின்போது உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார் பட்லர்.

image

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நடைபெறுகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ரன்வீர் சிங் ஆகியோரின் நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளன. இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாம்: சிக்ஸர்களை வாரி வழங்கிய மோசமான சாதனை.. முதலிடத்தில் ஆர்சிபி பவுலர்கள்!