[X] Close

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்

Rain-in-Tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, ’குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவு’ என்றார். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close