Published : 28,Apr 2022 03:43 PM

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைவு - தக்காளி விலை அதிகரிப்பு

Tomato-price-increased-in-Chennai-Koyambedu-market

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் வரும் தக்காளி தற்போது 50 லாரிகள் ஆக குறைந்துள்ளது.

இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த விலை ஏற்றத்திற்கு சுங்கக் கட்டண உயர்வும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய்க்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்