Published : 07,Apr 2022 03:14 PM

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு தேர்வுகள் துறை புதிய வழிகாட்டுதல்கள்

The-State-Examinations-Department-has-ordered-that-surveillance-cameras-be-installed-at-the-centers-where-the-question-papers-are-kept

வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள் மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் என்றும், இரட்டை பூட்டுக் கொண்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்களில் இந்த உத்தரவு இடம்பெற்றுள்ளது. விதிகளுக்கு புறம்பாக தேர்வுப்பணியில் அலுவலர்களை நியமிக்கக் கூடாது, பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது என்றும் தேர்வுகள் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

image

தேர்வறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், அன்றைய பாடத்துக்கான ஆசிரியராக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்களையே தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும், தேவைப்பட்டால் மட்டும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: கூகுள் மேப்பில் இனி சுங்கக் கட்டணத்தையும் அறியலாம்! புதிய அப்டேட் சொல்வதென்ன?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்