Published : 05,Apr 2022 09:28 AM
சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9-ல் தாக்கல் செய்யப்படும் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகின்ற ஒன்பதாம் தேதி தாக்கல் செய்யப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இதையடுத்து வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று, கூட்ட இறுதியில் 2022 - 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டிய பொருள்கள் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.