[X] Close

ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் போராட்டம்

உலகம்

Sri-Lankans-in-New-Zealand--Australia-take-to-the-street-against-govt-

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின.

image


Advertisement

இந்நிலையில், மக்கள் எதிர்ப்பும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களும் தாங்கள் வசிக்கும் நாடுகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அப்படி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இலங்கை மக்கள் ஒன்றுதிரண்டு அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் போராட்டத்தின்போது `கோட்டாபய ராஜபக்ச அரசின் தவறான கொள்கைகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசரநிலையை அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது’ என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஏற்கெனவே இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள், `அரசை கலைத்துவிட்டு காபந்து அரசு அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருவது கோட்டாபய ராஜபக்ச அரசை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டமும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. நிலைமையை கட்டுப்படுத்த நினைத்து, மக்கள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் சில தினங்களுக்கு முன் இலங்கையில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. அதுவும் இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

image

ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் - பொது அமைதியைப் பேணவும், அரசு - தனியார் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது மனித உரிமையை மீறிய செயல் என இலங்கை மனித உரிமை ஆணையக்குழு எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஊரடங்கிற்கு எதிரான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை காவல்துறையினர் கலைத்தனர். போலவே 13 மணி நேர மின்வெட்டை கண்டித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச வீட்டின் அருகே 51வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்துகொண்டார். ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை இலங்கையில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இந்த போராட்டங்கள், மக்கள் எழுச்சியால் இலங்கை ஸ்தபித்து வருகின்றது.

சமீபத்திய செய்தி: இலங்கையில் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close