Published : 26,Mar 2022 05:20 PM

தீப்பற்றி விபத்துள்ளாகும் சம்பவங்கள்.. பேட்டரி வாகனங்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

மாறிவரும் உலகில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேசமயம், மின்சார வாகனங்களினால் உதிரிபாகங்கள் தீப்பற்றி விபத்துள்ளாகும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. இந்த சூழலில், மின்சார வாகனங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

"மின்சார வாகனத்தின் முக்கிய பாகங்களாக மோட்டார், பேட்டரி, முகப்பு பகுதி ஆகியவை உள்ளது. இதில், மோட்டார் இயக்கத்திற்கு பேட்டரியின் பங்களிப்பு மிகவும் அவசியம். எனவே, பேட்டரி மற்றும் அதோடு தொடர்புடைய பாகங்களின் பாராமரிப்பு மின்சார வாகனத்தின் இயக்கம் மற்றும் செயல்திறனுக்கு அவசியமாகிறது.

மின்சார வாகன நிறுவனத்தால் கொடுக்கப்படும் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். சார்ஜர் முழுமையாக ஏறிய பின்னர் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்கு பிறகுதான் வாகனங்களை இயக்க வேண்டும்.

மின்சார வாகனங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள பழுது பார்க்கும் இடங்களில் பராமரிக்க வேண்டும். மின்சார வாகனங்களை நிறுத்தும் இடங்களில் எலி மற்றும் வீட்டு செல்ல பிராணிகளை போன்ற விலங்குகளும், குழந்தைகளும் அண்ட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் தேங்கும் இடங்களில் கொண்டு செல்லக்கூடாது. சார்ஜ் போடும் பிளக் பாயிண்ட்டுகளில் எர்த் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என்கிறார், மின்சார வாகன வாடிக்கையாளர் மோகன்.

image

மின்சார வாகன பழுது பார்க்கும் விக்னேஷ் பேசும்போது,

”பொதுவாக மின்சார வாகனங்களில் லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லித்தியம் ஆயான் மின்கலம் அதிகமாக சூடாக்கப்பட்டாலோ அல்லது அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டாலோ பாதிக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் பேட்டரி சூடாகும் போது தீவிர நிகழ்வுகளில் தீ விபத்திற்கு வழி வகுக்கும். இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மூலம் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நடைபெறுகின்றது.

மேலை நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் குறைவு என்பதால் 5 வருடமாக வாகனங்கள் வெளியிட்டுவரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் வீட்டிலேயே சார்ஜ் போட்டு கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அதனால், வாடிக்கையாளர்கள் கால அவகாசம் இன்றி வாகனங்களை சார்ஜ் செய்கின்றனர். லித்தியம் அயான் மின்கலத்தை பொருத்தவரை அதிக அளவில் வெப்பநிலை படுத்தப்பட்டால் அதன் மூலக்கூறுகள் சூடாகி வெடித்துச் சிதறும் இயல்புடையது.

image

மின்சார வாகன தயாரிப்பின் வாகனங்களின் சார்ஜிங் பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மின்சார பேட்டரி, சார்ஜிங் போர்டு ( port ), மின்சார பேட்டரிகளை இயக்கும் மின்சுற்றுகள், சார்ஜர்கள் தரமாக இருப்பது அவசியம். 12,24 மற்றும் 36 வோல்டேட்ஜ் கொண்ட மின்சார பேட்டரிகள் சந்தையில் உள்ளன. இவை 10 முதல் 15 மணி நேரம் சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வடிவமைப்பிற்கு ஏற்றார்போல தரமான சர்கியூட்கள் வடிவமைப்பது அவசியம் என தெரிக்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

மின்சார வாகன உற்பத்தியாளர் கணேசன் பேசும்போது,

”இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் 1,32,219 மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு எரிபொருள் தேவையை குறைப்பதற்காக மின்சாரமாக உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு வழிச் சலுகைகள் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மின்சார வாகனங்கள் அதன் உதிரி பாகங்களால் ஏற்படும் தீ விபத்துகள் அதற்கான காரணங்களை நிலையான ஆய்வு மேற்கொண்டு அதை களைவதற்கும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் அரசு நிலையான ஆய்வு மேற்கொண்டு தரமான பாதுகாப்பான மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு வழிவகைகளை ஏற்படுத்தி தரவேண்டும். போதுதான் மின்சார வாகனங்களால் ஏற்படும் தீ விபத்துக்களை மேலை நாடுகளைப் போல் நாமும் குறைக்க முடியும்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்