Published : 04,Sep 2017 04:39 AM
நுங்கம்பாக்கத்தில் அனிதாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அனிதாவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித், வெற்றிமாறன், நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். பறை இசை முழக்கத்தோடு அனிதாவின் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.