Published : 28,Feb 2022 11:54 AM

"அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்கு திராணி இல்லை" - ஓபிஎஸ் விமர்சனம்

The-DMK-government-has-no-power-to-meet-the-AIADMK-politically-OPS-review

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் நலமுடனும், தெம்பாக இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெய்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சந்தித்து பேசினர். சுமார் அரைமணி நேரம் சந்தித்து பேசிய பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது

image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், காவல் துறையிடம் ஒப்படைத்தார். திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததால் உண்மைக்கு மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது இதற்காக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துகின்றனர்.

image

அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளது. எந்த வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம். கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தி வருகிறது.

image

அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்கு திராணி இல்லை. ஜெயக்குமார் நலமாகவும், தெம்பாகவும் உள்ளார். எதிர்க்கட்சியை அழித்து விட திமுக அரசு கங்கணம் கட்டியுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்