Published : 26,Feb 2022 02:01 PM

குறைகிறதா பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி?

Govt-may-cut-fuel-taxes-to-help-state-run-firms

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க பெட்ரோலியப் பொருட்கள் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போரால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பேரல் விலை 100 டாலரைக் கடந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கணிசமான அளவு உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால், அது சரக்கு போக்குவரத்தை பாதித்து பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால், பணவீக்கம் உயர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்க நேரிடும்.

image

கச்சா எண்ணெய் 100 டாலரைத் தொட்டால், பணவீக்கத்தில் 0.65 சதவிகிதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பணவீக்க உயர்வைத் தவிர்க்க, பெட்ரோலியப் பொருட்கள் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்து அதிகரித்துக் கொண்டே சென்றபோது லிட்டருக்கு 10 ரூபாய் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.

சமீபத்திய செய்தி: உக்ரைன் - ரஷ்யா போரின் பாதிப்புகள் என்ன? - இரு நாடுகளும் எதிரெதிராக அறிக்கை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்