Published : 20,Feb 2022 10:07 PM

முகலாய பேரரசர்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை: நாணயங்கள் சேகரிப்பில் அசத்தும் ஐ.டி ஊழியர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் பண்டையக்கால நாணயங்களை சேகரித்து வைத்து வியப்பில் ஆழ்த்துகிறார்.

நாணயங்கள் சேகரிப்பு பலரும் விரும்பி செய்யக் கூடிய ஒன்றாக உள்ளது. பலர் பொழுதுபோக்காகவும், சிலர் ஆராய்ச்சியாகவும் இதனை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திராவின் மச்சிலிப்பட்டனத்தைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் கிரிதர் ஸ்ரீபதி என்பவர், பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், முகாலயர் காலம் என பல்வேறு பண்டையகால தொடர்பு கொண்ட நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

image

சிறு வயதில் தனது பாட்டி பிறந்தநாள் பரிசாக பழங்கால நாணயங்களை அளிக்கவே, அதில் ஆர்வம் ஏற்பட்டு தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்களை சேமித்து வைத்துள்ளார்.

image

இந்திய வரலாற்றில் முகலாய பேரரசர்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை ஆட்சி செய்த அனைத்து காலகட்டங்களின் நாணயங்களையும் தனிப்பட்ட முறையில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். இவர், தனது ஊதியத்தின் ஒரு பகுதி தொகையை நாணயங்களை சேகரிக்க மட்டுமே செலவு செய்து வருகிறார். நாணயங்களை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், சேமிக்கும் நாணயங்களின் வரலாறு குறித்தும் தகவல்களை கிரிதர் திரட்டி வைத்துள்ளார். கி.மு. 200-ம் ஆண்டு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களை கூட தனது சேகரிப்பில் கிரிதர் ஸ்ரீபதி வைத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்