வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 104 ரன்கள், பண்ட் 85 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 80 ரன்கள், ரோகித் 78 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 57 ரன்கள், தீபக் ஹூடா 55 ரன்கள், கே.எல்.ராகுல் 49 ரன்கள் எடுத்திருந்தனர். இதில் ஹூடா இரண்டு போட்டிகளும், ஷ்ரேயஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தனர்.
பவுலிங்கில் இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 27.1 ஓவர்கள் இந்த தொடரில் அவர் வீசியுள்ளார். இந்திய அணிக்கு கேம் சேஞ்சராக ஜொலித்தவர் அவர். அவருக்கு பிளேயர் ஆப் தி சீரிஸ் விருது கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் பதிவு செய்த ஷ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அடுத்ததாக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த தொடர் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்