Published : 07,Feb 2022 12:37 PM

கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்

110-kilo-Cannabis-seized-near-chennai

சென்னை, திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை மாநில போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தன. கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்தனர்.

போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க மாநில போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் பிரிவு மாநில போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையான பொன்னியம்மன் பட்டறை செக் போஸ்ட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

image

அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் இரு பைகளில் சுமார் 50 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதேபோல திருவள்ளூர் காக்கலூர் இடைமடை பகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் அவ்வழியாக வந்த மற்றொரு காரை சோதனையிட்ட போது அதிலும் இரு பைகளில் சுமார் 60 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த நிலமலை, ரமேஷ் மற்றும் உமா ஷங்கர் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் 10581 என்ற அவசர எண்ணுக்கோ, 94984 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் மாநில போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்