Published : 02,Feb 2022 01:12 PM
பிப் 14-ல் தொடங்கும் சல்மான் கான் -கத்ரீனா கைஃப்பின் ‘டைகர் 3’ படப்பிடிப்பு

சல்மான் கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
பிரபுதேவாவின் ‘ராதே’ படத்திற்குப்பிறகு சல்மான் கான் ‘டைகர் 3’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கும் இப்படத்தை, மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ’டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா சூழலால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தமுடியாமல் தள்ளிப்போனது.
கடந்த மாதம் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் கொரோனாவால் தள்ளி வைத்தது படக்குழு. இந்த நிலையில், வரும் 5 ஆம் தேதி மும்பை யாஷ் ராஜ் ஃபிலிம் ஸ்டுடியோவில் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கவுள்ளனர். மேலும், சல்மான் - கத்ரீனா கைஃப் நடிக்கும் காட்சிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் டெல்லியில் படமாக்கப்படவுள்ளன. கத்ரீனா கைஃப் நடிப்பில் கடைசியாக ‘சூர்யன்வன்ஷி’ வெளியானது. திருமணத்திற்குப்பிறகு ‘டைகர் 3’ படப்பிடிப்பில் இணைகிறார் கத்ரீனா கைஃப்