Published : 29,Jan 2022 04:51 PM

ஆவடியில் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே திருட முயன்ற இளைஞர்: இணையத்தில் வெளியான வீடியோ

Young-man-tries-to-steal-while-eating-ice-cream-Video-posted-on-the-Internet

சென்னையை அடுத்த ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே வீட்டை நோட்டமிட்ட திருடன் வீட்டிலிருந்த லவ் பேர்ட்ஸை கூண்டோடு திருடிச் சென்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவடி காமராஜர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபீர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், தனது வீட்டில் நடந்த திருட்டு முயற்சி சிசிடிவி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், இளைஞர் ஒருவர் வீட்டின் மதில்சுவர் மீது ஏறி குதித்து வீட்டை நோட்டமிடுகிறார்.

அப்போது கண்கணிப்பு கேமரா இருப்பதைக் கண்ட திருடன், கேமராவை திருப்பி வைத்தார். ஆனால், கேமரா மீண்டும் பழைய நிலையில் திரும்பிக் கொண்டது. அதை கவனிக்காத திருடன் அங்கிருந்த பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறான்.

image

பின்னர் அங்கிருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து அதில் இருந்த கோன் ஐஸை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே மீண்டும் வீட்டை நோட்டமிடுகிறார். பின்னர் மேலும் சில ஐஸ் கிரீமை எடுத்துச் சென்றார். இவை அனைத்து அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சபீர், இந்த திருடனை கண்டுபிடிக்க உதவிடுமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில் திருட வந்த திருடன் ஏற்கெனவே ஒருமுறை இரவில் வீட்டினுள் வந்து சிசிடிவி கேமராவை மேல் நோக்கி வைத்துவிட்டு லவ் பேர்ட்ஸை கூண்டு அவிழ்த்து விட்டுச் சென்றுள்ளார்.

image

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனினும் மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவே இதனை இணையத்தில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்