[X] Close

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக மெல்ல குறையும் ஒருநாள் கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

Tamilnadu-covid-cases-update-today

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் நேற்று 30,215 என உறுதியாகியிருந்த கொரோனா பாதிப்பு, இன்று 30,055 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இதுவரை பாதிப்பு உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 31,94,260 என்றாகியுள்ளது.

தொற்று குறைந்திருந்தாலும்கூட நேற்று 19.4 % என்று இருந்த தொற்று உறுதியானோர் எண்னிக்கை, இன்று 2% உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே கோவையில் அதிகபட்சமாக 27.8 என பதிவாகியுள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும்கூட, உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஐ நெருங்குகியே இருக்கிறது. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 என்றாகியுள்ளது.


Advertisement

image

கடந்த 24 மணி நேரத்தில், 25,221 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தற்போது சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,11,270 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,45,678 என்றாகியுள்ளது.

மாவட்ட வாரியாக பார்க்கையில், தினசரி பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,241 என பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து கோவை 3,763 என்றாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் 1229 என்றாகியுள்ளது பாதிப்பு.

சமீபத்திய செய்தி: ’’காரும் நான்தான்... விமானமும் நான்தான்’’ - விரைவில் மாஸ்காட்ட வருகிறது பறக்கும் கார்! வெளியானது புது அப்டேட்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close