Published : 28,Aug 2017 11:24 AM
மியான்மரில் தொடரும் வன்முறை: ரோஹிங்யா மக்கள் வங்கதேசத்தில் தஞ்சம்

மியான்மரில் சில நாள்களாக நீடித்து வரும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வங்கதேச எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மியான்மரின் வடமேற்கு மாகாணமான ராகினேவில் வசிக்கும் ரோஹிங்யா இன மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நீடித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து வங்கதேச எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களை வங்கதேச பாதுகாப்புப் படையினர் மீண்டும் அவர்களது நாட்டுக்கு செல்லும்படி வற்புறுத்துவதால் ரோஹிங்யா மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.