Published : 28,Aug 2017 06:55 AM

தனியாக இருந்த மாணவி கழுத்து அறுத்து கொலை

Dharamapuri--girl-who-was-alone-was-killed-by-the-neck

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வீ‌ட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளனர். 

கெங்குசெட்டிபட்டியைச் சேர்ந்த சஞ்சீவன், சாந்தி தம்பதியினர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், மாணவியின் அண்ணன் மோகன்குமார் விநாயகர் சிலையைக் கரைக்க ஒகேனக்கலுக்கு சென்றிருக்கிறார். மோகன்குமார் மாலை வீடு திரும்பியபோது, மாணவியின் கழுத்து அறுபட்ட நி‌லையில், சடலமாகக் கிடந்துள்ளார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்திருக்கிறது. ‌தகவலறிந்து வந்த போலீசார், பணம், நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்