வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் கூறுகையில், ‘'டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு குறித்து விராட் கோலி அணியின் கூட்டத்தில் தெரிவித்தார். அவரது இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். அணியின் கேப்டனாக அவர் அளித்த பங்களிப்புக்காக நாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அவரது முடிவு சரியா தவறா என்று நான் கருத்து கூற முடியாது.
விராட்கோலி தலைமையின் கீழ் விளையாடுகையில் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார். அவர் அணிக்கு நிறைய பங்களித்துள்ளார். இன்னும் நிறைய பங்களிப்பை அளிப்பார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதனை நான் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன். எந்தவொரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அதில் நானும் மாறுபட்டவன் கிடையாது'' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: “பிரதர்! அடுத்த தலைமுறையினரின் கேப்டன் நீங்கள்” - கோலி குறித்து பாக்.வீரர் முகமது அமீர்
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!