சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை 1967-ஆம் ஆண்டு, அவரது பதினான்கு வயதிலேயே தொடங்கி விட்டது. ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஸ்டாலின் இதுவரை கடந்து வந்த சுவடுகளை தெரிந்து கொள்வோம்...
திமுக தலைவர் கருணாநிதிக்கும்-தயாளு அம்மாளுக்கும் 3 வது மகனாக 1953 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிறந்த ஸ்டாலினுக்கு தற்போதைய வயது 63. இவருடைய அரசியல் பிரவேசம் திமுக முதன் முதலில் ஆட்சியைப்பிடித்த 1967ஆம் ஆண்டு தொடங்கியது. தனது 14-ஆவது வயதிலேயே அரசியலில் கால் பதித்த மு.க.ஸ்டாலின் 1973 ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். பிறகு 1975இல் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்டார்.
1982 ஆம் ஆண்டு முதல் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பை கவனித்து வந்த மு.க.ஸ்டாலின் முதன்முறையாக 1984 ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
இருப்பினும், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அதையடுத்து 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றியை வசப்படுத்தினார். அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
2001 தேர்தலில் 3 முறையாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ மற்றும் சென்னை மேயராக தேர்வானார். ஆனால் 2002 ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தால் மேயர் பதவியை விட்டு, எம்எல்ஏவாக மட்டும் தொடர்ந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு 4 வது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு தமிழகத்தின் துணைமுதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு திமுகவின் பொருளாளராகவும் தேர்வானார்.
பின்னர் 2011,2016 இல் நடைபெற்ற தேர்தல்களில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்துவரும் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவின் செயல் தலைவர் என்ற புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!