Published : 08,Jan 2022 08:14 PM
நாளை முழு முடக்கம்: பொருட்களை வாங்க தி.நகர் அங்காடிகளில் குவிந்த பொதுமக்கள்
நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க தியாகராய நகரில் உள்ள அங்காடிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்க பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்றே பொருட்களை வாங்க சென்னை தியாகராய நகரில் உள்ள அங்காடிகளில் மக்கள் குவிந்துள்ளனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.