ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை தொடங்குவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 2021-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸஸ் மெயின்ஸ் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை தொடங்குவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, யு.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“கொரோனா பெருந்தொற்று சூழல் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஜனவரி 7, 8, 9 மற்றும் 15, 16-ம் தேதிகளில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மெயின் தேர்வு 7-ம் தேதி (வெள்ளி) முதல் தொடர்ந்து நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் அடையாள அட்டை மற்றும் ஹால்டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை அனுமதிக்கலாம்.
தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு சென்றுவர வசதியாக தேர்வு தொடங்குவதற்கு முந்தைய நாள் (இன்று) முதல், கடைசி நாள் வரை முடிந்த அளவுக்கு பொதுப்போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யுமாறும், மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!