Published : 04,Jan 2022 04:38 PM

கோல்ப் பேட்டை இரண்டாக உடைத்த உலகின் மிகப்பெரிய 'கொள்ளை நண்டு' - வைரல் வீடியோ

Viral-Video-Worlds-Largest-robber-Crab-Breaks-Golf-bat-In-Two

உலகின் மிகப்பெரிய கொள்ளை நண்டு, கோல்ப் பேட்டை பாதியாக உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2020 இல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமீபத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட பின்னர் வைரலானது. ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் ஒரு வீரரின் கோல்ஃப் பேட்டை கவ்வியிருந்த ராட்சத கொள்ளை நண்டு, அதனை இரண்டு துண்டாக உடைத்தது.

புஹ்னர் என்பவர் முதலில் இந்த வீடியோவை அக்டோபர் 2020 இல் படமாக்கினார், ஆனால் அவரது மகன் அதை நண்பருக்கு அனுப்பிய பின்னர் அது சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது.

கிறிஸ்துமஸ் தீவு சிவப்பு நண்டுகளுக்கு பிரபலமானது, ஆனால் தேங்காய் நண்டுகளும் இந்த தீவில் உள்ளன, இவை கொள்ளை நண்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நண்டுகள் அதிகபட்சமாக 1 மீட்டர் அளவு மற்றும் 4.5 கிலோ எடை கொண்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்