Published : 20,Dec 2021 01:50 PM

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

Electoral-reform-bill-tabled-in-Lok-Sabha-despite-opposition

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்ற அவலத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு முனைப்புக் கொண்டுள்ளது. இதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா, அதாவது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்