Published : 14,Dec 2021 02:28 PM

தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கோலி மிஸ் செய்யப்போகிறாரா?

Virat-Kohli-may-miss-the-ODI-Series-against-South-Africa-reports-says-and-this-was-Rohit-Sharma-s-First-Series-as-ODI-Captain

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடர் ஜனவரி 15 அன்று நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் 23 வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஜனவரி வாக்கில் தனக்கு விடுப்பு வேண்டுமென கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதனால் அவருக்கு விடுப்பு கொடுக்கும் பட்சத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை மிஸ் செய்ய வாய்ப்புகள் உள்ளனர். கோலியின் மகள் வாமிகாவுக்கு வரும் ஜனவரியில் முதல் பிறந்தநாள் வருவது குறிப்பிடத்தக்கது. 

image

ரோகித் ஷர்மா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் ரோகித், முழுநேர கேப்டனாக அணியை வழிநடத்த உள்ள முதல் ஒருநாள் தொடர். இந்த தொடரை கோலி மிஸ் செய்வார் என தகவல்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்