புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடுவதற்கு லஞ்சம் பெற்ற மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. இந்நிலையில் இது குறித்து நேற்று முன்தினம் புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் மாவுக்கட்டு போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர் கணேசன் என்பவர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பான நிலையில், எலும்பு முறிவு பிரிவு தலைமை மருத்துவர் தலைமையிலான விசாரணை குழு அமைத்து, விசாரணை நடத்தபட்ட நிலையில், லஞ்சம் பெற்ற ஊழியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் ரத்தனவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்