Published : 01,Dec 2021 07:20 PM

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு - கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

Defamation-speech-against-Chief-Minister--Bail-for-arrested-BJP-executive

அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட பாஜக ஒபிசி சங்க மாநில துணைத் தலைவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஒபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக ஜெயங்கொண்டம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அகோரத்தை கைது செய்தனர். அவர் இன்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், இது குறித்து விசாரணை செய்த நீதிபதி அகோரத்திற்கு  2 லட்சத்திற்கான பிணைய பத்திரத்தையும், 2 ஜாமீன்தார்கள் தலா 10 ஆயிரத்திற்கான பிணைய பத்திரத்தையும் கொடுத்ததன் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு பாஜக சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்காத திமுக அரசை கண்டித்து நேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில்  பேசிய அக்கட்சியின் ஒபிசியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல மாநிலத் துணை தலைவர் அகோரம் மீது தமிழக முதல்வர் ஸ்டாலினை அவதூறாகவும், மரியாதை தரக்குறைவாகவும் பேசுதல், இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் தூண்டுதல் போன்ற காரணங்களுக்காக 294 B, 153,504,505 ஆகிய பிரிவுகளின்கீழ் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சீர்காழியில் கைது செய்யப்பட்ட அவரை, இன்று ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இதனைப்படிக்க...“என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம்” - அஜித் அறிக்கை 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்