[X] Close

தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் மீது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு

தமிழ்நாடு

Train-collision-with-a-boy-trying-to-cross-the-tracks

தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்த சிவனேசன் (17) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் காலை கடனை முடித்துவிட்டு, சென்னை விருத்தாசலம் இருப்பு பாதையை கடக்க முயன்றுள்ளார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதி சிவனேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close