Published : 23,Nov 2021 07:22 PM
’ஒய்ட்டில் க்யூட்டி’: கவனம் ஈர்க்கும் ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கர் புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கரின் போட்டோஷூட் கவனம் ஈர்த்துள்ளன.
இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். அதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார்.படித்து முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஒய்ட் கலர் காஸ்டியூமில் அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவனம் ஈர்த்துள்ள இந்தப் புகைப்படங்களை ’ஒய்ட்டில் க்யூட்டி’ என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.