[X] Close

தமிழில் ஒரு ’அர்ஜூன் ரெட்டி’? : ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ ட்ரெய்லர் வெளியீடு

சினிமா

actor-gv-prakash-pachelor-trailer-release

ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் டிசம்பர் 9 ஆம் தேதி வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படமும், ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் உதவி இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள ‘பேச்சிலர்’ படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளன. இதில், ‘பேச்சிலர்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்கள். ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Advertisement

கவனம் ஈர்க்கும் ஹம்மிங் பின்னணியில் ஓடும்  ட்ரெய்லர் முழுக்க முழுக்க காதலாய் நிறைந்துள்ளது. குறிப்பாக, ஜி.வி பிரகாஷ் திவ்ய பாரதியை வெறித்தனமாக காதலிக்கும் காதலராய் நடித்திருக்கிறார். ‘நீ என்ன சைக்கோவா’ என்று ஜி.வி பிரகாஷைப் பார்த்து திவ்ய பாரதி கேட்பதும், அதனைத்தொடர்ந்து வரும் வசனங்களும், எப்போதும் சோகமாய் அழுதுகொண்டே இருப்பதும் தெலுங்கில் வெற்றிபெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை நினைவூட்டுகின்றன. ட்ரெய்லரை பார்த்துவிட்டு கருத்திடுபவர்களும் ’தமிழில் ஒரு அர்ஜுன் ரெட்டி’ என்றே கருத்திட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close